பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

179


கடல் கடந்த அனுமனுமே
     காட்டிடுவன் பேர் உருவை
அடல்மிகுந்த கம்பனுமே

     அன்னவனை விஞ்சிடுவான்.


இன்னும்,

எத்தனையோ சிறுநதிகள்
     இக்கடலைத் தானடையும்
அத்தனையும் உள்ளடக்கி
     அமரநிலை பெற்று
வித்தகர்கட்கு வித்தகமாய்
     விற்பனர்க்கு நிலைக்களனாய்
பத்தர்கட்கு பத்திமையாய்,
     பரமார்த்த சாதனமாய்,
கம்பன் எனும் பெருங்கடலே
     கற்பவர்க்கு களிப்பருளும்
நம்பன் அருளாலே
     நம்மிடை யேபிறந்து
கல்வியிற் பெரியவனாய்
     கவிச்சக்ர வர்த்தியெனவே
எல்லோரும் போற்றுகின்ற
     இனிய நிலை பெற்றான்.
அன்னவன்தான்,
     இற்றைக் கவி யுலகில்
     ஏற்றமுறு பீடமதில்
விற்றுக் கொலுவிருந்து

     விம்மிதத் தோடாட்சிசெய்வான்.


இத்தகைய

தமிழ்க்கவிஞன் சந்நிதியில்
     தலைதாழ்த்தி கைகூப்பி
அமிழ்தனைய தமிழ் பாடி

     அன்பன் விடைபெறுவேன்.