தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
19
- கம்பன் – அது கிடக்கட்டும்.
- இனி நான் வளர்ந்த காலம்
பண்டைத் தமிழர் வாழ்வை எல்லாம் நீயறிவாய். சங்க இலக்கியங்கள் எல்லாம் நீ படித்தவன் தானே. அந்தக் காலத்தில் தமிழன் விரும்பியதெல்லாம் போரும் காதலும்தான். வீட்டில் இருந்தால் காதல் வாழ்விலே திளைப்பான் தமிழன். வெளியே இறங்கினால் போரிட முனைவான். நானிலம் அதனில் உண்டு போர் என நவிலின் தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையனாக அல்லவா வாழ்ந்திருக்கிறான் அன்றைய தமிழன். ஆண் மக்கள் தம் வீரம் காத்தலை வேண்டும் பெண்கள் தானே அன்று நிறைந்திருந்தார்கள். அப்போதுதான் சமணரும் பௌத்தரும் தமிழை விரும்பிக் கற்று நல்ல இலக்கியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்கு ஓர் உயரிய ஸ்தானம் அளித்திருக்கிறார்கள். ஆனால், அதன்பின் நாட்டிலே ஏற்பட்ட குழப்பங்களால் வீரமும் காதலும் ஓதலும் ஒழுக்கமும் குன்றியிருக்கிறது. பல்லவர் காலத்தே வடமொழி தமிழ்நாட்டில் தலைதூக்கியிருக்கிறது. இந்த வடமொழிக் கலப்பால் தமிழ்வளம் பெற்றிருக்கிறது. கங்கையும் யமுனையும் கலந்து உறவாடியதுபோல இரண்டு கலாச்சாரமும் இணைந்திருக்கிறது. தென்சொற்கடந்தவன் வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்தவனாக ஆகியிருக்கிறான். கங்கையாளொடு கரியவள் கலைமகள் கலந்த சங்கமம் போற்றப்பட்டிருக்கிறது.
வீரத்தையும் காதலையுமே பொருளெனக் கண்ட தமிழர்,
- ‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
- நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
- அலகிலா விடையாட்டுடைய’
ஒரு தனிப் பரம்பொருளைக் காண முற்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சமணமும்