உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கம்பன் சுயசரிதம்


நான் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் சுவாமி சிவபிரானது மூர்த்தங்களில் உங்களுக்கு உகந்த மூர்த்தம் எதுவோ?

“பஞ்சில் மெல்லடியாள் பாகன்
பாதுகம் அல்லது
அஞ்சலித்து அறியாச் செங்கை”

உடையவன் அல்லவோ நான். நானிருந்த காலத்தில் கோயில்களின் கர்ப்பக் கிருஹத்தின் பின்புறத்தில் எல்லாம் அந்த மாதிருக்கும் பாதியினது சிலைதானே வைக்கப்பட்டிருக்கும்.

நான் – ஆமாம். இந்த இராஜராஜன் அதை எடுத்துவிட்டு லிங்கோத்பவரை நிறுத்தியிருக்கிறான். அப்போது நீங்கள் சொல்கிறது சரி. நீங்கள் ஆதியும் அந்தமுமிலா அரும்பெரும் சோதியைக் கூறவேயில்லை என நினைக்கிறேன். அப்போது நீங்கள் ராஜராஜனுக்குப் பின்னால் எப்படியிருந்திருக்க முடியும். இருந்திருந்தால் அதை எப்படிக் கூறாதிருக்க முடியும்.

கம்பன் – சரி, சரி, ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாய்போல் இருக்கிறது.

நான் – இல்லை, இல்லை. இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும். நீங்கள் சென்னி நான் தெரியல் வீரன் தியாக விநோதனைக் குறிக்கிறீர்கள் - இந்தத் தியாகவிநோதன் என்ற பட்டம் மூன்றாம் குலோத்துங்கனின் சிறப்புப் பெயர். ஆதலால் தாங்கள் அவன் காலத்திலேயே வாழ்ந்தவர்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டுகிறார்களே? அதற்கென்ன சொல்கிறீர்கள்?

கம்பன் – அதுவா? அதுதான் நான் முன்னமேயே சொன்னேனே. ஒரு சொற்றொடரை மட்டும் பிடித்துக்கொண்டு ஆடாதே என்று. நான் தியாக விநோதன் என்று கூறியது - நீ சொல்கிறாயே யாரோ மூன்றாம் குலோத்துங்கன் என்று