பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கம்பன் சுயசரிதம்


நான் – அடே! தெய்வமாக் கவி என்று தாங்கள் குறித்தது அந்த வள்ளுவரைத்தானா? நாங்கள் எல்லாம் வான்மீகரைத்தான் குறிக்கிறீர்கள் என்றல்லவா நினைத்திருந்தோம்.

கம்பன் – நீங்கள் ஏமாந்தால் அதற்கு நானா பழி? நான் போற்றிய புலவன் வள்ளுவனே. இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமா என்ன?

நான் – காவியத்தை எழுதினர்களே. காவியத்தில் எத்தனையோ பாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறீர்களே, அதில் உங்களுக்கு உகந்த பாத்திரம் எது என்று சொல்லலாமோ?

கம்பன் – நீயும்தான் என் காவியத்தைப் பல வருஷங்களாய்ப் படித்திருக்கின்றாய். இதைக் கண்டுபிடிக்க முடியாமலா போயிற்று.

நான் – லக்ஷிய புருஷன் ராமன் தங்களுக்கு உகந்த பாத்திரம் என்பதை அறிவேன். அவனை விலக்கி விட்டு மற்றைய பாத்திரங்களில் தங்களுக்கு உகந்தவன், தங்கள் கொள்கைகளை எல்லாம் வெளியிடுவதற்குத் தகுந்தவனாகக் கருதுகின்ற பாத்திரம் யார் என்று அறியலாமா என்று பார்த்தேன். அவ்வளவுதான்.

கம்பன் – அதையும்தான் நீயே கண்டுபிடியேன்.

நான் – குணாதிசயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் பரதன் தான் தங்களுக்கு உகந்தவன் என்று தெரிகிறது. அவனைத்தான் ஆயிரம் ராமருக்கும் மேலே என்றும் எண்ணில் கோடி ராமர்கள் அவன் அருளுக்கு ஒவ்வார் என்றும் உரைத்தீர்கள்.

கம்பன் – இவ்வளவுதானா உன்னுடைய படிப்பு? பரதன் உத்தமோத்தமன்தான். ஆனால் அவன் தன் முயற்சியால்