பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. கவி உலகில் கம்பர் இடம்

லை, இலக்கியம், முதலிய காரியாதிகளிலே பழம் பெருமை வாய்ந்தவர்கள் கிரேக்கர். ஹோமர் போன்ற மகாகவிகளும், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஸாக்ரடீஸ் போன்ற அதிமேதாவிகளும் கிரேக்கர்களின் இலக்கிய வளத்திற்குப் பெருமை கொடுக்கிறார்கள். ஆதலால் எதற்கெடுத்தாலும், எந்த இலக்கியத்தையெடுத்தாலும் எந்தக் காவியத்தைப் பார்த்தாலும் கிரேக்க இலக்கியங்களோடு ஒப்பு நோக்கியோ அல்லது அரிஸ்டாட்டில் பிளேட்டோ முதலானவர்கள் சொல்லும் இலக்கண உரை கல்லில் உரைத்துப் பார்த்தோதான் எடை போடுகின்ற பழக்கம் ரசிகர்களிடையே, விமர்சகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

ஒரேயொரு சின்ன விஷயம். அதைப் புலவர், பல தேசத்துப் புலவர், பல பாஷைக் கவிஞர்கள் எப்படி எப்படி எல்லாம் சொல்ல முற்படுகிறார்கள் என்று பார்க்கலாம்.

கிரேக்கர்களின் சிறந்த இலக்கியம் ஹோமர் எழுதிய இலியட். டிராய் நகரத்து அரசன் பாரிஸ் என்பவன் ஹெலன் என்ற பெண்ணைத் தூக்கிச் செல்கிறான். அதனால் சண்டை மூளுகிறது. டிராய் நகரத்தில் எல்லாம் சீதாபஹரணத்தினால் ஏற்பட்ட இராம ராவணப் போர் போலத்தான். டிராய் நகரத்தின்