பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கம்பன் சுயசரிதம்


மீது கிரேக்கர்களின் போர்க்கடவுளான மார்ஸ் (Mars) தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துவிடுகிறான். அந்த நேரத்தில் அந்த நாட்டில் எழுந்த உற்பாதங்களை ஹோமர் வர்ணிக்கிறார்.

The Mountains Shock
The Rapid Streems Stood Still.

என்றும் நிலைபெற்றிருக்கிற மலைகளும் நடுங்கிவிட்டன. விரைவாக ஓடிக் கொண்டிருந்த நதிகளும் அப்படியே நின்றுவிட்டன. சலனமில்லாததும், சலனமுடையதுமே ஸ்தம்பித்து விடுகின்றன, நாட்டில் ஏற்பட இருக்கும் ஒரு பெரிய தீமை காரணமாக என்று அறிகிறோம்.

ஆங்கில நாட்டில் உயந்த கவி என்று மதிக்கப்படுகிறார் ஜான் மில்டன். அவர் பாடியுள்ள சுவர்க்க நீக்கம் (Paradise Lost) சுவர்க்க (Paradise Regained) பிரசித்தமான இலக்கியங்கள். சுவர்க்க நீக்கம் மேலை நாட்டு மொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்தக் கவிஞனுக்கும் ஹோமருக்குக் கிடைத்தது போல ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இன்ப வாழ்வின் இருப்பிடமாகிய ஏதேன் தோட்டத்தில் ஆதி மக்களாகிய ஆதாமையும் ஏவாளையும் இருக்கும்படி பணிக்கிறார். இறைவன் அவர்கள் அங்கே வாழ்வதற்கு ஒரு சிறு நிபந்தனையையும் போடுகிறார் அவர். அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லா மரத்தின் கனிகளையும் பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் ஒரேயொரு மரத்தை மட்டும் அணுகக் கூடாது. அதில் பழுக்கும் பழங்களையும் விலக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், சாத்தான் சும்மா இருப்பானா? ஏவாளை அணுகினான். விலக்கப்பட்ட மரத்தின் கனி ருசியைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினான். இந்தக் கடவுள் இந்த ஒரு மரத்தை மட்டும் விலக்கி