பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

41

படம் குறைந்து ஒதுங்கின
பாம்பும் பாதகக்
கடுந்தொழில் அரக்கனைக்
காணும் கண்ணினே.

என்று. ஹோமர், மில்டன், வான்மீகி, கம்பன் எனும் நான்கு மகாகவிகள் ஒரே விஷயத்தை எப்படி எப்படி எல்லாம் சொல்கிறார்கள் என்று பார்த்தோம். அறம் திறம்பிய ஒரு காரியத்தால் இயற்கையே துயருறும் என்ற சாதாரண விஷயத்தைத் தான் சொல்கிறார்கள் நால்வரும். மலைகளை நடுங்க வைக்கிறார், ஓடும் நதியை ஸ்தம்பிக்கச் செய்கிறார், ஹோமர். இயற்கையின் இதயத்தையே கீறிக் காட்டுகிறார் மில்டன். வான்மீகரோ மரங்களை அசைவற்றிருக்கச் செய்கிறார், ஓடும் நதியை ஸ்தம்பிக்கச் செய்கிறார். ஏன், காற்றின் மூச்சையே பிடித்து அமுக்கி நிறுத்திவிடுகிறார். இத்தனை பேர் சொன்னதையும் தொகுத்துச் சொல்பவன் போல கம்பன் மலைகளையும், மரங்களையும், நடுங்க வைக்கிறான். பறவைகளையும் விலங்குகளையும் அஞ்ச வைக்கிறான். மேலும் ஊரும் இனமாகிய பாம்பையும் படத்தைக் கீழே போட்டுப் படுக்க வைக்கிறான். கருத்துகள் எல்லாம் ஒரே படித்தாக இருந்தாலும் அவைகளைச் சொல்லுவதிலே சொல்லுக்குச் சொல்லழகு ஏற்றுவதிலே கம்பன் எல்லோரையும் விஞ்சத்தான் செய்கிறான். இக்கவிஞர்கள் ஒருவரிலிருந்து ஒருவரைப் பிரித்து வைக்கும் இடை நெடுங்காலமும், தூரமும் எவ்வளவினதாகவோ இருக்கிறது. இருந்தாலும் மகாகவிகள், மகா மேதாவிகள் எல்லாம் ஒரு படித்தாகவே எண்ணுவார்கள் என்ற உண்மையை விளக்கிவிடுகிறார்கள் இவர்கள்.

இதிலிருந்து தெரிகிறது கவிச் சக்கரவர்த்தி கம்பன் உலக மகாகவிகளோடு ஒருங்கு வைத்து எண்ணப்படுகிறார் என்று. கிரேக்கர்களுக்கு ஹோமர் எப்படியோ, ரோமர்களுக்கு விர்ஜில்