பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கம்பன் சுயசரிதம்

எப்படியோ, இத்தாலியர்களுக்கு டாண்டி எப்படியோ, ஜெர்மானியர்களுக்கு கெத்தே எப்படியோ, ஆங்கிலேயர்களுக்கு மில்டன், ஷேக்ஸ்பியர் எப்படியோ வட இந்தியர்களுக்கு வான்மீகியும் காளிதாசனும் எப்படியோ அப்படியே தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமே பெருமை கொடுக்கிறான் கம்பன் என்பர் ராவ், சாஹிப், பால் நாடார் அவர்கள். அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மையே என்று நான் இப்போது தெரிந்துகொண்டேன்.

கவி உலகிலே கம்பனுடைய இடம் என்ன என்று கேள்வி எழும்போது, அது சாதாரணமாகத் தமிழ்க்கவி உலகிலே அவர் ஸ்தானம் என்ன என்பதைப் பற்றி அல்ல. தமிழ்க் கவி உலகிலே அவன்தான் ஏக சக்ராதிபத்யம் செய்கிறானே! கவிச் சக்கரவர்த்தி கம்பன் என்ற நிறைந்த மொழிகளால் அழைக்கப்படுகிறான். கல்வியில் பெரியவன் கம்பன் என்றும் பாராட்டப்படுகிறான். ஆதலால் அவனுடைய ஸ்தானத்தை தமிழ்க்கவி உலகிலே நிர்ணயிப்பது என்பது பிரமாதமான காரியமே இல்லை தான்.

ஆனால் உலக மகாகவிகளோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் இக்கம்பன் அவர்களிடையே வகிக்கும் ஸ்தானம் என்ன என்பதைப் பற்றித்தான் கேள்வி. இந்தக் கேள்விக்குத் தீர்மானமாக ஒரு விடை நாம் பெறுவதற்கு மேல்நாட்டு இலக்கியரசிகர்கள் உதவியைத்தான் முதன்முதலில் நாம் நாடவேண்டும். மேல்நாட்டு இலக்கியங்கள் அத்தனையும் ஒன்றாய்ச் சேர்த்து எடை போட்டு அதன் தராதம்யங்களை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ரசிகர்கள், விமர்சகர்கள் ஒரு சிலரே உண்டு. அவர்களின் டிரைடன் (Dryden) என்ற ஆங்கிலப் புலவன் ஒருவன் அந்த வேலை செய்வதில் ஒப்பற்றவன்தான். அவன் சொன்னான், ஒரு காலத்தில் இந்த உலகத்திலே இத்தனை வருஷங்களுக்கிடையிலே மூன்றே மூன்று மகா கவிகள்தான் தோன்றியிருக்கிறார்கள்.