பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கம்பன் சுயசரிதம்


பேதமை உரைத்தாய் மைந்த!
உலகெலாம் பெயரப் பேராக்
காதை என் புகழனோடு
நிலைபெற, அமரர் காண
மீதெழும் மொக்குளண்ண
யாக்கையை விடுவதல்லால்
சீதையை விடுவதுண்டோ
இருபது திண்தோள் உண்டு
வென்றிலன என்றபோதும்,
வேத முள்ளளவும் யானும்
நின்றளன் அன்றோ அவ்
இராமன் பேர் நிற்குமாயின்
பொன்றுதல் ஒரு காலத்தும்
தவிருமோ? பொதுமைத்தன்றோ
இன்றுளார் நாளை மாள்வ்ர்
புகழுக்கும் இறுதி யுண்டோ

மூன்று பாக்களையும் பாடப்பாட இராவணன் மனோ வலி, அவன் புகழுக்குச் செய்யும் வியாக்கியானங்கள் எல்லாம் நம்மை அப்படியே அதிசயித்து நிற்கச் செய்துவிடும்.

மில்டனுடைய காவியத்திலே ஈடுபட்டு உள்ளம் பறி கொடுத்திருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியிடம், நான் மேலே சொன்ன பாக்களின் கருத்துக்களை மட்டும் (தாளலயத்தில் அமைந்துள்ள அருமையான கவிகளையல்ல) சொன்னபோது, அந்த அம்மாள், அடேயப்பா உங்கள் கம்பன் எங்கள் மில்டனோடு தோள் தட்டியே அல்லவா நிற்கிறான். (your kamban stands shouldor to shoulder with our Milton) என்று சொன்னாள். அதற்கு நான் சொன்ன பதில் இதுதான்.

இல்லை, அம்மணி! எங்கள் கம்பன் உங்கள் மில்டனோடு தோள் தட்டி மட்டும் நிற்கவில்லை. அந்த