பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. கம்பன் கலைக்கோயில்

மிழ்நாட்டில் ஒரு கோயில். ஏன் ஒரு கோயில்? தமிழ்நாடு முழுவதும் எத்தனை எத்தனையோ கோயில்கள் வானுற ஓங்கி வளர்ந்து நிமிர்ந்திருக்கின்றன.

விண் மறைக்கும் கோபுரங்கள்
வினை மறைக்கும் கோயில்கள்
வேறு எந்த நாட்டில் உண்டு
வேலையின் விசித்திரம்

என்றெல்லாம் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாராட்டப்படுகின்றன. இருந்தாலும் எல்லாக் கோயில்களையும் விடப் பெரிய கோயில் ஒன்று, இன்று தமிழ்நாட்டில் உண்டு. ஆம் உருவத்திலும் பெரிய கோயில்தான். பெயரிலும் பெரிய கோயில்தான். கோயில் அமைப்பும் மற்றக் கோயில்களைப் போலச் சாதாரணமானதல்ல. கோயிலைச் சுற்றி ஓர் அகன்ற அகழி. அகழிக்கு உள்ளடங்கிய ஓர் உயர்ந்த மதில், மதிலுக்கு உள்ளே வெளிப்பிரகாரம். அதன் உள்ளே கோயில். அர்த்த மண்டபம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம். எல்லாவற்றிற்கும் நடு நாயகமாய்க் கர்ப்பக்கிருகம். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே கோயில் கொண்டிருக்கிறார் இறைவன் லிங்க உருவத்தில். பெரிய கோயிலில் உள்ள