பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

55

எல்லாம் அதிமுக்கியமான பாத்திரமான சீதாதேவியை கம்பன் எப்படிச் சித்தரித்திருக்கிறான் என்று பார்ப்போம்.

ஜனகன் மகள் ஜானகி மிதிலையில் அவதரிக்கிறாள். பொன்னின் ஜோதி, போதினில் நாற்றம், தென்னுண்தேனின் தீஞ்சுவை, செந்சொற் கவி இன்பம் எல்லாம் திரண்டு உருவெடுத்தவளாக அவள் இயங்குகின்றாள். அவள் ரூப சௌந்தர்யத்தின் எல்லை காணுகின்றாள்.

கணங் குழையாள் எழுந்ததற் பின்
கதிர் வானிற் கங்கை யெனும்
அணங்கு இழியப் பொலிவிழந்த
ஆறெத்தார் வேறுற்றார்

என்று பாராட்டப்படுகின்றாள். இளமை நலமெல்லாம் நிறைந்து விளங்கும் பேதைதான் அவள். அந்த நிலையிலே தான் கன்னி மாடத்திலிருந்து தெருவூடே செல்லும் இராமனைக் காண்கின்றாள். காதல் கொள்ளுகிறாள். வில்லொடித்த வீரன் என்பதற்காக இராமனை மணக்க அவள் இசைகின்றாள் இல்லை. தான் முன்னர் கண்டு காதலித்த தலைவனே என்று ஐயமற உணர்ந்த பின் தான் அவனை மணக்க இசைகின்றாள். இளமை உள்ளந்தான் எனினும் அதில் உறுதியும் உறைந்து கிடக்கின்றது. இவள்தான் நாம் மிதிலையில் காணுகின்ற சீதை.

பின்னர் அயோத்தியில், சக்கரவர்த்தியின் மருமகளாய், அண்ணல் வெஞ்சிலைக் குரிசிலாகிய இராமனை இணைபிரியாது பெண்ணின் இன்னமுது அன்னவளாகிய சீதை வாழ்கின்றாள். இராமன் தாயுரை கொண்டு தாதை உதவிய தாணி தன்னை நீத்துக் கானாளப் புறப்பட்ட போதும், நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும் மேயமண் இழந்தான் என்றும் விம்மலள் அவள். அவன் நீ வருந்தாதே, இங்கேயே இரு என்று சொன்ன தீய வெஞ்சொல்தான் அவளைச் சுட்டு