பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கம்பன் சுயசரிதம்

வருத்துகின்றது. கல்லரக்கும் கடுமைய அல்லநின் சில்லரக் குண்ட சேவடிப் போது - என்று செல்லும் வழியின் கஷ்டத்தையெல்லாம் இராமன் பன்னிப் பன்னி எடுத்துரைத்தாலும் நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்பதுதான் அவள் பதிலாக நிற்கின்றது. இராமனும் பின்னர் ஒன்றும் செய்ய இயலாதவனாய், தையல் தன் கற்பையே துணையெனக் கொண்டு காட்டிற்குச் செல்கின்றான். இது நாம் அயோத்தியில் காணுகின்ற சீதை. சீதையின் ரூப சௌந்தர்யமும் குண செளந்தர்யமும் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன.

கானகத்திற்குத் தன் தலைவனான இராமனுடன் போவதில்தான் எவ்வளவு உத்ஸாகம் அவளுக்கு. பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும், சேலுடை நெடு நன்னீர் சிந்தி விளையாடிப் போகும் காட்சியைக் காணும்போது சீதை காட்டுக்குப் போகிறோமே என்று அஞ்சியவளாகவா இருக்கிறாள்? சித்திரக் கூடத்திலே இலக்குவன் கட்டிய பர்ணசாலையில் சீதைக்கு ஓர் அந்தப்புரமும் அமைக்கிறான். சித்திரக்கூடத்திலும் பின்னர்ப் பஞ்சவடியிலும் சீதை தன் நாயகனுடன் உறையும் ஆனந்தத்திலேயே முழுகி இருக்கிறாள்.

ஓதிமம் ஒதுங்கக்கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்கிறான்
மாதவள் தானும் ஆங்கு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூக்கறாள.

இதுதான் அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் எல்லையாகிவிடுகிறது. இவள் தண்டகாரண்யத்தில் நாம் காணும் சீதை.

இலக்குவன் கட்டிய பர்ணசாலை, அந்தப் பர்ணசாலை கட்டியிருந்த இடம் - எல்லாவற்றையுமே பெயர்த்தெடுத்து