64
கம்பன் சுயசரிதம்
என்றே அதிசயிக்கிறான் அவன். இராமனது சௌந்தர்யத்திலே குகன் ஈடுபடுகிறான், அனுமன் ஈடுபடுகிறான், விபீஷணன் ஈடுபடுகிறான், என்றெல்லாம் எத்தனையோ சான்றுகள். எல்லாவற்றையும் விட, அந்த காமவல்லியாம் சூர்ப்பனகை ஈடுபடுகிறாளே அதை என்ன என்று சொல்ல? பஞ்சவடியிலே பன்னக சாலையிலே இருக்கின்ற ராமனைக் காண்கின்ற சூர்ப்பனகை இவன் என்ன மன்மதனா? ஆம், அன்று கற்றைவார் சடையவன் கண்ணில் எழுந்த தீயினால் வெந்த அநங்கன், எத்தனையோ வருஷ காலம் தவம் செய்து இந்த நல்ல உருவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே அவளது தீர்மானம். அவனது மணிக்கரம், வீரத்தோள் எல்லாம் கிடக்கட்டும் அவனது அகன்ற மார்பு இருக்கிறதே. அதை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் பார்க்க கண்களுக்கு நீளம் போதாது போல் இருக்கிறதே என்று வேறே ஐயுறுகிறாள். கடைசியில் அந்த அழகன் வாள் முகம் பொதி அவிழ் தாமரைப் பூவை ஒத்ததா? இல்லை மதியை ஒத்ததா என்றெல்லாம் தீர்மானிக்க முடியாமல் தத்தளிக்கிறாள். இத்தனை அழகை இவன் பெறத் தவமே தவம் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். இம்மட்டோ பின்னர் சீதையையும் இராமனையும் சேர்த்துப் பார்த்த பின் இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவ்விருவர் என்றே அவர்களது அழகை அனுபவிக்கிறாள். இப்படி எல்லாம் ராமனது அழகை அனுபவித்த சூர்ப்பனகை, இலங்கைக்கே ஓடி இராவணனிடம் தன் முக்கு அறுபட்ட கதையைச் சொல்கிறாள். சீதையின் அழகை வர்ணிப்பதற்கு முன்பே, யாவர்க்கும் எழுத ஒண்ணாத ராமனை வர்ணிக்கிறாள். கடைசியில் விரகதாபத்தால் வெந்து கொண்டிருக்கும் ராவணன், தன் உரு வெளித்தோற்றத்தில் கண்ட சீதை தானா அவள் சொன்ன சீதை என்று சூர்ப்பனகையிடம் கேட்க, அவள் ராமனையே அவளது உரு வெளித்தோற்றத்தில் கண்டு. ஆம் அவனே,