பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

71

இராவணன் பாராட்டுக்களைக் கம்பன் கவியாக நாம் படிக்கிறபோது.

கடைசியில் இந்த வீரன் ராவணனது மார்பையே சல்லடைக் கண்களாகத் துளைத்து விடுகிறது ராமனது சரம். போர்க்களத்தில் விழுந்து உயிர் துறந்து கிடக்கிறான். அவன் மனைவி மண்டோதரி வந்து மேல் விழுந்து புரண்டு அழுகிறாள். அவன் உடலை, ராமனது அம்புகள் எப்படித் துளைத்திருக்கின்றன என்பதைப் பார்க்கிறாள். புலம்புகிறாள்,

வெள் எருக்கம் சடைமுடியான்
வெற்பு எடுத்த திருமேனி
மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி
உயிர் இருக்கும் இடம் நாடி
இழைத்த வாறோ!
கள் இருக்கும் மலர்க் கூந்தல்
ஜானகியை மனச் சிறையில்
கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி
உடல் புகுந்து தடவியதோ
ஒருவன் வாளி

என்பதுதானே அவள் தன் அங்கலாய்ப்பு. ‘சொல் ஒன்றே, மனைவி ஒன்றே, அம்பும் ஒன்றே’ என்ற புகழ் நிறுவிய வீரன் ராமனின் பெருமைகளைக் கவிஞனும் சொல்லிக் கொண்டே போகிறான். நானும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். முடிவு வேண்டுமே என்றுதான் நிறுத்தவேண்டியிருக்கிறது.

ஒரேயொரு ஐயம். ‘ராவணாதியர் வதத்தை நிகழ்த்தி முடித்தது, ராமனது வீரம் மட்டுந்தானா? சீதைக்கு இந்த வெற்றியில் பங்கே இல்லையா? அவள் தன் கற்பு என்னும் கனலும் ராமனது அம்போடு சேர்ந்து அரக்கர்களைச் சுட்டெரிக்கவில்லையா? பஞ்சு எரி உற்றது போல, அரக்கர் எல்லாம், சீதையின் கற்பாகிய கனலில் அல்லவா வெந்து