பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கம்பன் சுயசரிதம்

கொல் என்னும் சொல்’ என்று. அதையே நினைவு கூறுகிறோம் நாம், இத்தகைய புதல்வனைப் பெறுவதற்கு தந்தையாம் தசரதன் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்று.

ராமன் ஏக பத்ணி விரதன் என்பது பிரசித்தம். எவ்வளவோ சொல்லியும் கேளாமல் சீதை ராமனுடன் காட்டிற்குப் புறப்பட்டு விடுகிறாள். எல்லையற்ற இடர் இதனால் நேரும் என்று தெரிந்தும் உடன்கூட்டிச் செல்கிறான். அங்கும் அந்த சீதை சொல்கேட்டு மாரீசன் என்னும் மாயமானையே தொடர்கிறான். அதனால் சீதையை அரக்கன் சிறை எடுக்கவே காரணமாக இருக்கிறான். பின்னர் சிறையிலிருந்த செல்வியாம் சீதையைத் தேடி இலங்கை சென்று ராவணனைக் கொன்று சீதையைச் சிறைமீட்டு வருகிறான். சீதை அசோகவனத்தில் சிறை இருந்த காலம் எல்லாம் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் உயிர் காத்தது என்னது என்று நினைக்கிறீர்கள். ராமன் அவள்பால் கொண்டிருந்த அன்புதான்.

அன்று மிதிலையில் வந்து தான் கரம் பற்றிய போது ‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று கூறி அந்தச் செவ்விய வரம்பிலேயே நின்றிருக்கிறான் என்றால், அதனைச் சீதையால் பாராட்டாதிருக்க முடியுமா? சீதையின் பிரிவால் அவன் துயறுற்றுப் புலம்பும் நிலையெல்லாம் அவனை ஓர் உத்தம புருஷனாகத்தானே காட்டுகின்றது.

இந்த மாவீரன் ராமனுக்குத்தான். விதியின் விளையாட்டில் எத்தனை நம்பிக்கை. ‘வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ’ என்று தன்னையே தேற்றிக் கொள்ளும் வகையைக் கம்பன் பல இடங்களில் கூறுகின்றானே. ஏன் அன்று ராமனுக்குப் பட்டம் இல்லை, பரதனுக்குத் தான் பட்டம் என்பதை இலக்குவன் அறிந்து கொதித்து எழுந்தபோது, அவனது ஆறாக்கனல் ஆற்றும் அஞ்சனமேகம் போன்றல்லவா இருந்திருக்கிறான். அத்தோடு தம்பி இலக்குவனைப் பார்த்து