உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொருளடக்கம்



இம்பர் நாட்டில் செல்வம் எலாம்
        எய்தி அரசாண்டிருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா
        ஓங்கும் நீழல் இருந்தாலும்
செம்பென் மேரு அனைய புயத்
        திறல் சேர் இராமன் திருக்கதையில்
கம்ப நாடன் கவிதையைப் போல்
        கற்போர்க்கு இதயம் களியாதே!