பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கம்பன் சுயசரிதம்

நோக்கினான், நெடிது நின்றான்
நொடிவு அருங்கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
குவிந்து இருபடிவம் ஆகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
வீரராய் விளைந்தது என்பான்

அழகைக் கண்டவர்கள், வீரர்களாக காட்சி தருகிறார்கள். ஊன்றி நோக்கும்போது இன்னும் கொஞ்சம் பக்கத்திலேயே வந்துவிடுகிறார்கள் அவர்கள். ஆர அமர அவர்களது வடிவினைக் கண்டு நோக்கியபோது விஷயம் விளங்குகின்றது சுக்ரீவனுக்கு. இவர்கள் ஏதோ சாதாரண மனிதர்கள் அல்ல. மனித உருவில் வந்திருக்கும் தேவரும் தொழும் தேவரே. ஆம் இவர்கள் அவதார புருஷர்களாகவே அவதரித்திருக்கிறார்கள் என்று தேறுகிறான். இதனையும் விளக்கமாகவே கூறுகிறான்.

தேறினன், அமரர்க்கு எல்லாம்
   தேவர் ஆம் தேவர் என்றே
மாறி இப்பிறப்பில் வந்தார்
   மானுடர் ஆகி மன்னோ
ஆறு கொள் சடிலத் தானும்
   அயனும், என்ற இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம்
   மானுடம் வென்றது அன்றே!

என்று சுக்ரீவன் உணர்கிறான். உண்மைதானே! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, மனிதர் எல்லாம் வானுறையும் தேவர்களாக விரும்பும் நேரத்தில் வானுலகில், உள்ள தேவர்கள், மனிதர்களாக அவதாரம் செய்யவேண்டும் என்றால், இந்த மானுடப் பிறவியில் ஏதோ விசேஷம் இருக்கத்தானே வேண்டும். ஆதலால் தான் கம்பன்