பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கம்பன் சுயசரிதம்

எப்படி எல்லாமோ சொல்லிச் சொல்லி மகிழ்கிறான். ஜனகனது பேரவையில் வீற்றிருக்கின்ற ராமனை ஜனகனுக்கு விஸ்வாமித்திரன் அறிமுகம் செய்து வைக்கிறான். அவனது குலமுறையையே கிளத்துகிறான்.

விரிந்திடு தீவினை செய்த
   வெவ்விய தீவினையாலும்
அருங்கடைஇல் மறைஅறைந்த
   அறம் செய்த அறத்தாலுமே

பிறந்தவன் ராமன் என்பதே கம்பன் எண்ணம். அதையே கூறுகிறான் விஸ்வாமித்திரன். ஏன்?

கோனும் சிறிய கோத்தாயும்
   கொடுமை இழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
   இடுக்கண் காத்த கழல்வேந்தாம்
ராமனே, வானின்று இழிந்து வரம்பு இகந்த
   மாபூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும்போல்
    உள்ளும் புறத்தும் உள்ள

இறைவன் என்றே கடவுள் வணக்கம் கூறுவான் கம்பன். இன்னும் தண்டக ஆரண்யத்திலே ராமனால் தோள் துணிக்கப்பட்டு மண்ணில் வீழ்ந்து சாப விமோசனம் பெற்ற விராதன் துதியைத் தான் படித்துப் பார்ப்போமே.

பனிநின்ற பெரும் பிறவிக்
    கடல்கடக்கும் புணையற்றி
நனிநின்ற சமயத்தோர்
    எல்லோரும் நன்று என்ன
தனிநின்ற தத்துவத்தின்
    தகைமூர்த்தி நீஆகில்
இனிநின்ற முதல்தேவர்
   என்கொண்டு என்செய்வாரே