பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கம்பன் சுயசரிதம்


மறை திறம் பாத வாய்மை
   மன்னர்க்கு முன்னம் சொல்லும்
துறை திறம்பாமல்
   காக்கத் தோன்றினான்

ராமன் என்பது தானே நாம் அறிந்தது. அவன் ஓர் அவதார மூர்த்தி என்பதை

மேல் ஒரு பொருளும் இல்லா
    மெய்ப்பொருள் வில்லுந் தாங்கி
கால் தரை தோய நின்று
    கட்புலனுக்கு உற்ற தம்மா

என்று வாலி கூறுவது யாருடைய கூற்று என்று நினைக்கிறீர்கள்? அதுவும் கவிச்சக்கரவர்த்தி கம்பனது கூற்றுத்தானே. கம்பனுக்கு முன்னாலேயே இந்த எண்ணத்தை உருவாக்கியவர்கள் உண்டு. வால்மீகி உருவாக்கிய உத்தம புருஷன் - காளிதாஸனது வருணனைகளிலும், ரஸிகர்களது ரஸானுபவங்களிலும், ஆழ்வார்களது பக்தி அனுபவங்களிலும் வளர்ந்து, கம்பனது காவியத்தில் அவதார புருஷனாக, அவதார மூர்த்தியாகவே ஆகிவிடுகிறான். இவனே பின்னர், பக்த தியாகராஜரது கீர்த்தனைகளினாலே தென்னாட்டிலே நிலைபெற்று நின்றுவிடுகிறான். அந்த அவதார மூர்த்தியை அறிமுகப்படுத்துவதிலே கம்பன் பெருமிதம் கொள்கிறான். அதைச் சொல்வதிலே நான் புளகாங்கிதமே அடைகிறேன்.

ஏரி காத்த பெருமான் - இராமன்

கவிச் சக்ரவர்த்தி கம்பன் தமிழ்நாட்டில் பல தலங்களுக்குச் சென்றிருக்கிறான். தொண்டை நாட்டில், உள்ள அந்தப் பிரபலமான கச்சிக்கே சென்றிருக்கிறான். அங்குள்ள ஏகம்பனையே வணங்கியிருக்கிறான். கம்பன் ஏதோ கம்பங்கொல்லையைக் காத்ததினாலாவது இல்லை கம்பை ஊன்றி நடந்ததினாலாவது தான் கம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது அறியாமையே. தேரழுந்தூரில்