பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

95

உரைசெய தந்தை ஏவ ஒரு சாம்ராஜ்யத்தையே துறந்து காட்டிற்குப் புறப்படும் ஒரு மகன், காடு சென்ற தமையன் நாடு திரும்பும் வரை தவக்கோலம் தாங்கி வாழும் ஒரு தம்பி, காடு சென்ற இடத்திலும், வேடன் ஒருவனையும், குரங்கு ஒன்றையும், அரக்கன் ஒருவனையுமே தன் உடன் பிறந்தானாகச் சேர்த்துக்கொள்ளும் ஒரு வீர புருஷன், எல்லோரும் இடம்பெற்றது வியப்பில்லைதானே.

இன்னும், ஐந்து மனைவியரை அடுக்கடுக்காய் மணந்த அரசர்கள் பரம்பரையை அறிந்த கம்பன், ‘ஏகும் நல்வழி அவ்வழி என்மனம்’ என்ற உறுதிப்பாட்டில், நிலைத்து, இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று செவ்விய வரம்பில் நின்று, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்த அந்த ராமன் பேரிலேயே காதல் கொண்டிருக்கிறான். தன்னுடைய கற்பின் வலி எத்தகையது என்று தெரிந்திருந்தும் அதனால், தானே சிறை மீள்வது தன் நாயகன் வில்லின் ஆற்றற்கு மாசு தருவதாகும் என்று கருதி, அசோகவனத்தில் சிறையிருந்த செல்வி தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டல்லவோ என்று கம்பன் நினைத்திருந்தால் அது தவறில்லை தானே. ஆகவேதான் கம்பன் ராமகாவியம் எழுத முனைந்தான்; வெண்ணெய் அண்ணல் வேண்டும் ஆதரவு தந்தான்; காவியம் உருவாயிற்று, காவிய நாயகனும் உருவானான் இந்தக் காவிரிக் கரையிலே,

நாரதர் விரும்பியபடி ராமாயணம் பாடப் புறப்பட்டிருக்கிறார் வான்மீகி, அதையே பாடினான் காளிதாசன் ரகுவம்சத்தில். அந்த ராமனையே துதித்திருக்கிறார்கள் குலசேகரர் போன்ற ஆழ்வார்கள். இவர்களது அடிச்சுவட்டையே பின்பற்றியிருக்கிறான் கம்பன்.

இதனால்தான் காசில் கொற்றத்து ‘ராமன் திருக்கதை, ராமாவதாரப் பேர்த்தொடை நிரம்பிய தோமறு மாக்கதை’யாகத் தமிழ்நாட்டில் நிலைத்துவிட்டது. கதை நிலைத்து காவியம்