பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

271



“இவன் எந்தக் கட்சி? யாருக்கு இவன் எதிர்க் கட்சி? இவன் முன்சரித்திரம் என்ன? இவற்றை அறிந்து கூறுகிறேன்”.

“இவனை இலங்கையில் கண்டு இருக்கிறேன்; கள்ள அரக்கர் மத்தியில் வெள்ளை உள்ளம் படைத் தவன்; அரசநீதி அறிந்தவன்; தூதுவனாகச் சென்ற எனக்குத் துயர் விளைவிக்கவிடாமல் தடுத்தவன். அந்த நாட்டில் அச்சடித்த நீதி நூலில் ஊன் உண்ணாமையும், மது மறுத்தலும் தடை செய்யப்பட்டவை; இவனோ விதி விலக்கு: சைவ உணவு தவிர மற்றவற்றைச் சுவையாதவன்; கோயில் குருக்களாகப் பிறக்கவேண்டியவன்; அரக்க குலத்தில் பிறந்துவிட்டான்.”

“இவன்தான் இப்படி அவன் மகள் எப்படி? அந்தப் பெண் அங்கு இல்லாவிட்டால்; சிறை வாசத்தைச் சீதைக்கு சுகவாசமாய் மாற்றி இருக்க முடியாது. இராவணன் மருட்டியபோது எல்லாம், “அவன் கட்டுண்ட பட நாகம்; வெற்று வேட்டு; அவனால் சீதையைத் தொட முடியாது; தொட்டால் அவன்தலை சுக்கு நூறாகும்” என்ற சாபத்தை எடுத்துச் சொன்னவள் அவள்தான். சீதைக்காக நம்பிக்கைக் கனவுகளைக் கண்டு சொல்லியதும் அவள்தான்; அந்தக் குடும்பமே நமக்குத் துணையாக இருந்து வருகிறது; பகை நடுவே பண்புமிக்க நண்பர் அவர்கள்; இது அவர்கள் மனித இயல், அரசியல் வேறு”.

“இவன் பகை மண்ணில் பிறந்தவன்; போர் மறைகளை அறிந்தவன்; யார்? எது? என்பனவற்றை அறிந்து தெரிந்தவன். இராவணன் பெற்ற வரமோ, அவன் படையின் தரமோ நமக்குத் தெரியாது; ‘உடன் பிறந்தே