பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

கம்பராமாயணம்



படைத் தலைமைக்கு ஏற்கனவே இருந்த சுக்கிரீவனோடு வீடணனையும் சேர்த்தான் இராமன், இராம இலக்குவராய் அவர்களை மாற்றிவிட்டான்; அவர்கள் இரட்டையர் ஆயினர்; வீடணன் படைத் தலைமை ஏற்று அவர்களை ஊக்குவித்தான், உற்சாகப்படுத்தினான்.

வாழ்த்தும் தொழிலையுடைய வானவர் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்; “வீடணன் பெற்ற வெற்றியும் பெருவாழ்வும் உலகில் யாரும் பெற்றிலர்” என்று அவனைப் பாராட்டி வாழ்த்தினர்.

கட்சிமாறும் அரசியல்வாதிகளுக்கு அவன் முன்னோடியாய் விளங்கினான்; சரித்திரப் புகழ்பெற்ற சாதனை மனிதனாய்க் காணப்பட்டான்; உறவு கொண்டவனை விட்டுக் கொள்கை கண்டவனிடம் அரண் தேடிச் சரண் அடைந்துள்ளான். “இது சரியா தவறா” என்பதற்கு இதுவரை முன்னுரை கூறினார் களே தவிர முடிவுரை கூறியதாய்த் தெரியவில்லை.

கடலைக் கடக்கும் வழிவகை

நெருப்பிடையே நிழலைக் காண்பது போலப் பகைவரிடையே ஒரு நண்பனை, வீடணனை இராமன் கண்டான். அவனிடம் இலங்கையின் இயற்கையைப் பற்றியும் இறைமாட்சியைப்பற்றியும் கேட்டு அறிந்தான். அரண்களைப் பற்றியும் முரண்களைப் பற்றியும் பேசி அறிந்தான்; இராவணன் செயல்திறனை யும் ஆற்றலையும் அவன் நீக்குப் போக்குகளையும் கேட்டு அறிந்தான்; அவன் குறைகளையும் நிறைகளையும் அவன்