பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

279



போராடும் வீடணன் அறப் பற்றையும், அவன் பகைவர்களின் உளவாளியாகச் செயலாற்றுவதையும், இராவணன் சந்திக்க வேண்டிய சாதனைகளைப் பற்றியும் கூட்டாமலும் கழிக்காமலும் உள்ளதை உள்ளவாறு உரைத்தனர் ஆயினர்.

ஆணவம் மிக்க இராவணன், உலகப் போர்களுக்குத் துணை போகும் சர்வாதிகளைப் போலச் சிந்தனையின்றி, கர்வம் கொண்டு ஆவேசம் காட்டினான்; தன் வரத்திலும் உரத்திலும் நம்பிக்கை வைத்திருந்தான், இடியேறு அஞ்சும் படி இராமனை எள்ளி நகையாடினான்; எதிரிகள் மடிவது என்ற உறுதியில் பிடிவாதம் காட்டினான். நாவினால் பேசுவதைவிட வாளினால் வீசுவதையே நம்பினான் சொல்லேர் உழவனாய் இருந்து விவாதிப்பதைவிட்டு வில்லேர் உழவனாகச் செயல்பட விரும்பினான்.

இராவணன் நிலை இவ்வாறு ஆக, இராமன் செயல் வேறு விதமாய் இருந்தது; இலங்கை மாநகரின் மலை உச்சியில் ஏறி நின்று. அந் நகரைக் கண்டு மலைந்தான்; பொன்னொளிர் மதில்களையும், மின் அமர் மாளிகை களையும் கண்டு வியந்தான்; நகரத்தின் எழிலையும், மக்களின் கலைத் திறனையும் இலக்குவனுக்குக் காட்டி னான்; சிற்பிகள் சிரத்தை எடுத்துச் செதுக்கிய கற்பனை களைக் கற்களில் காட்டினான்; அவன் அன்னை கைகேயி, அயோத்தியில் அடிவயிற்றில் ஊட்டிய தீ, அணையாமல் சுடர்விடுவது போல அனு மன் மூட்டிய தீ வானை முட்டிக்கொண்டு எரிந்தது.

எட்டாத கனிக்குக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த இராவணன், சீதையை அடைய முடியாத