பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுத்த காண்டம்

285



சோர்ந்தவன் சோர்ந்தவன்தான், அவன் பாட்டன் மாலியவான் அருகில் வந்தான்; அவனுக்கு ஆறுதல் கூறினான்.

அவனிடம் இராவணன் தன் குலத்துக்கும் தனக்கும் வந்த பழியும் இழிவும் பற்றி மனம் அழிந்து கூறினான்; களத்தில் சந்தித்த இராமன் வீரத்தை ஒரு புராணமாய்ப் பாடினான்; “சீதை இராமனது பேராற்றலை. நேரில் காணும் வாய்ப்பைச் சரியாகப் பெறவில்லை; அவள் மட்டும் இதைப் பார்த்திருந்தால், காமனையும் என்னையும் நாயினும் இழிந்தவராகத் தான் கருதுவாள்; இராமன் இராமன்தான்; அவனுக்கு, நிகர் யாரையும் கூறமுடியாது; நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்றான்; குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட்டது அவனுக்கு ஒரு பெருமை.

பாட்டன், எரிகிற கொள்ளியை ஏறவிடும் வகையில் அறிவுரை கூறினான்; பகைக்குத் ‘துபம் போட்டான்’ என்று கூறமுடியும்.

“சீதையை விட்டுவிடலாம்; அப்பொழுதும் இழந்த புகழ் திரும்பப் போவது இல்லை; வெற்றி தோல்வி மாறி வரும். தப்பித் தவறி இராமன் வெற்றி பெற்றால் சீதை உன் கையைவிட்டுப் போய்விடுவாள்; சீதையையும் விடாதே! போரையும் நிறுத்தாதே”.

“மேலும் சீதையை அனுப்பிவிட்டால் அவளை விட்டு விட்டு, உன்னால் உயிர்வாழ முடியாது; அதனால், சமாதானம் உனக்கு எந்த நன்மையும் தரப்போவது இல்லை; போரில் உயிர்விட்டாலும் உயர் புகழ் வந்து