பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

289



“நீ அறிவுடைய அமைச்சன் என்பதால் உன்னை அழைக்கவில்லை; நன்றியுடைய வீரன் என்பதால் அழைத்தேன்; ஆனால் நீ போருக்குப் போகப் புலம்புகிறாய்; நீ மட்டும் உறங்கவில்லை; உன் வீரமும் உறங்கி விட்டது போலும்!” என்று கூறினான் இராவணன்.

“இனி நீ போருக்குப் போகவேண்டா, பொறுமை யைக் கடைப்பிடி, குடி, ஊன், உறக்கம்; இவற்றுக்குத் தான் நீ தகுதி, போர் உனக்கு மிகுதி.”

“மானிடர் இருவரை வணங்கு, கூனுடைக் குரங்கைக் கும்பிட்டு வாழ்க; வீடணன் வழி காட்டுவான்; சோற்றுப் பிண்டங்கள் நீங்கள்” என்றான்.

“தருக என் தேர்; எழுக என்படைகள்; நிகழ்க போர்; கூற்றமும் வானும் மண்ணும் அந்தச் சிறுவர்க்குத் துணையாக நிற்கட்டும்” என்று தொடர்ந்தான்.

“அச்சம் தவிர்; ஆண்மை இகழேல்; இவை அமுத வாக்குகள்; சென்று வருகிறேன்” என்றான் இராவணன்.

“அண்ணா!” என்று அலறினாள்.

“மண்ணாகப் போகும் இந்த வாழ்க்கை எனக்குப் பெரிது இல்லை, என்று கூறிச் சூலத்தைக் கையில் ஏந்தினான்.

“என்னைப்பொறுப்பாய்” என்று வேண்டினான். “வென்று இங்கே வருவேன் என்று சொல்வதற்கு இல்லை; விதி என் பிடர் பிடித்து உந்துகிறது; நான் இறப்பது உறுதி; அதுதான் என் இறுதி; அப்படி இறந்தால்