பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

கம்பராமாயணம்



உனக்கு நறுந்தேன்; இராமனைத் தவிர இப் பிறப்பில் வேறு மருந்தேன்? இதனை அறிந்தும் நீ இங்கு வந்தது ஏன்?” என்று கேட்டான்.

“நீ உயிர் தப்பிப் பிழைக்க வில்லை என்றால், இப்போரில் இறக்கும் அரக்கர்க்கு எள்ளும் நீரும் தந்து ஈமக்கடன் செய்யும் வாரிசினர் யார் இருக்கின்றனர்? நீ இங்கு வருவது இன்று அன்று; இழிபிறப்பினராய அரக்கர் எல்லாரும் மேல் உலகம் அடைந்த பிறகே ஆட்சிக்கு ஆள் தேவைப்படும்; உன் மீட்சியை வைத்துக்கொள்” என்றான் கும்பகருணன்.

“சொல்ல எந்தச் செய்தி உள்ளது?” என்றான் கும்பகருணன்.

“வெல்ல வந்த போரில், சொல்ல வேண்டுவது யாது?””

“இகபரசுகங்கள் இரண்டும் உனக்குக் காத்து இருக்கின்றன; எனக்கு இராமன் தந்த ஆட்சியை உன்மலரடி களில் வைத்து, நான், நீ ஏவிய பணி செய்யக் காத்துக் கிடக்கின்றேன்; எனக்குத் தந்த ஆட்சிச் செல்வத்தை உனக்குத் தந்துவிட்டேன்; இது இகத்தில் கிடைக்கும்

“பரத்தில் அடையும் பதமும் உள்ளது; உருளுறு சகட வாழ்க்கை இதனை ஒழித்து, இராமன் வீடுபேறு அருளுவான்; இதைவிட வேறு பேறுகள் என்ன கூற முடியும்? வா வந்து இராமனுடன் சேர்ந்துவிடு” என்றான்; அதற்கு