பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

145



கதையாகும். கலை உள்ளத்தோடு ரசிக்க வேண்டியவன் காமப் பார்வையோடு அவளைப் பார்த்துத் தன் நிலை கெட்டான். அது அவளை அரக்கனாக மாற்றியது. சீதை புனிதமானவள். அவளைத் தொட்டான் என்றாலும், கெட்டான் என்ற நிலை ஏற்படவில்லை. தெய்வம் அவனை மன்னித்துத் தேவனாக மாற்றியது. பள்ளத்தில் விழுந்து இருப்பவர், தெய்வ அருள் பெற்றால் ஒளி பெற்று உயர் பதவி பெறுவர் என்பதற்கு அவன் ஒர் எடுத்துக் காட்டாக அமைந்தான்.

சரவங்கன் பிறப்பு நீக்கம்

அவர்கள் சென்ற வழியில் சோலை ஒன்றில் சரவங்கன் என்னும் தவமுளிைவன் ஆசிரம் இருந்தது. அதில் அவர்கள் தங்கினர்; அங்கு ஒரு புதுமையைக் கண்டனர்.

தேவர் தலைவனாகிய இந்திரன், பிரமதேவன் ஏவற்படி அம் முனிவனை அழைத்துச் செல்ல அங்கு வந்து சேர்ந்தான். நீண்ட காலம் மாண்புமிக்க தவம் செய்த அம் முனிவருக்குப் பிரம தேவன் அழைப்பில் பிரமபதம் காத்துக் கிடந்தது.

பிறப்பை ஒழிக்க நினைத்த அம் முனிவன் அச்சிறப்புகளைப் புறக்கணித்தான்! பிறப்பு ஒழிந்து ‘பரமபதம்’ என்னும் பெருநிலையை அடையவே விரும்பினான். இந்திரன் வரம் தந்து உயர்த்த வந்த பணி நிறைவேறவில்லை. ‘வானாள வானவர்கோன் பதவி தந்தாலும் வேண்டேன்’ என்று கூறும் விறல் அம் முனிவனிடம் இருந்தது. இந்திரன் செய்த முயற்சி பயன்