பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

153



“மிகவும் நன்றி! அப் பெருந்துறையில் நீர் வைகி மாதவம் செய்வீர்; அதுதான் தக்கது” என்று கூறி விண்ணில் முன்னோக்கிப் பறந்து அவர்களுக்கு வழிகாட்டினான் சடாயு.

பஞ்சவடியை அறிய வழிகாட்டிய தூய சிந்தை உடைய சடாயு சென்றபின் வில்லை ஏந்திய வீரர்களாகிய இராம இலக்குவர் பஞ்சவடியை அடைந்து அங்கு உறைந்தனர். தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப் பறவை போலச் சடாயு அவர்களைக் காக்கும் அரிய பணியை மேற்கொண்டான்.

பஞ்சவடியில் வஞ்ச மகள்

பஞ்சவடி என்னும் பசுமையான சோலை, கோதாவரி நதிக் கரையில் இருந்தது; அது சான்றோர் படைக்கும் கவிதை போலத் தெளிவும் நிறைவும் பெற்று விளங்கியது; கண்ணைப் பறிக்கும் மணிகளை யும், மின்னல் போல் ஒளிவிடும் பொன்னையும், பெண்ணின் பற்களைப் போல் வெண்மையான முத்துக்களையும் வாரிக் கொண்டு வந்து ஐவகை நிலங்களில் குவித்தது; நீரால் அந் நிலங்களை வளப்படுத்தியது. அதன் ஒட்டம் இவர்களின் நாட்டத்தைக் கவர்ந்தது. பத்தினிப் பெண்ணோடு இராமன் அங்கு இனிமையாய்க் காலம் கழித்தான். இயற்கை அவர்களுக்கு வியப்பைத் தந்தது.

பால் நிலவைக் கண்ட சீதையும், இராமனும் தேனிலவை கண்டது இல்லை. இங்கு ஏன் என்று கேட்பார் அற்று, வண்ணப் பறவைகளையும் வனத்து விலங்கு களையும் அவற்றின் நேய உறவுகளையும் கண்டு