பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கம்பராமாயணம்



போக்கி அமைதியாக இருக்குமாறு அனுமன் கூறினான்; அஞ்சனை மகனாகிய அவன், அளுசன வண்ணனாகிய இராமனை மறைவில் இருந்து கவனித்தான்.

‘மூவர் கடவுளர்; இருவரே வந்துள்ளனர்; அதனால் இவர்கள் கடவுளர் அல்லர், வில்லேந்திய நிலையில் எதையோ தேடுபவராய் உள்ளனர்; சோகம் இவர்களை அணைந்திருக்கிறது; அன்பின் திருஉருவாய்க் காணப்படுகின்றனர்’, என்பதை அறிந்தான். பிரியம் கொள்ளத் தக்க மனிதராய்க் காணப்பட்டனர். அதனால் அஞ்சாமல் அவர்களை அணுகினான் அநுமன். அவர்கள் பார்வைக்கு அவன் விருந்தாயினான்.

“நீ யார்? எங்கிருந்து வந்தாய்? வந்தது ஏன்? என்ற வினாக்களைத் தொடுத்தனர்.

“காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று விரிவாய்ச் சொன்னான் அநுமன்.

“இம் மலையில் இருந்து வாழும் வேந்தன் சுக்கிரீவன்; அவனுக்கு யான் ஏவல் செய்வேன்; தேவரீர்! நின்வரவு நல்வரவாகுக; நும்மை நோக்கி விரைவில் வந்தேன்; “அனையவன் ஏவலினாலே உம்மை அறிய வந்தேன்” என்று மேலும் தொடர்ந்தான்.

“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.

“தான் கல்லாத கலையும் அறியாத வேதங்களும் இல்லை என்று கூறும்படி இவன் பேசுகின்றான்; யார்