பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

193



கொல் இச்சொல்லின் செல்வன்?” என்று வியந்தான்; “அவன் அந்தண வடிவத்தில் வந்தான் என்றாலும், சொந்த வடிவம் வேறு இருக்கவேண்டும்” என்பதை இராமன் உணர்ந்தான்.

“நீ கூறும் தலைவன் சுக்கிரீவனைத்தான் தேடி வந்தோம்; அவன் இருக்குமிடம் அறிவி” என்றான் இராமன்.

வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த அனுமன், அங்குச் சுக்கிரீவன் வந்த வரலாற்றை விளக்கினான்; ருசியமுகப் பருவதத்தில் உயிருக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்து கொண்டிருப்பதை உரைத்தான்; இந்திரன் மகனாகிய வாலி, கதிரவன் காவ்முளையாகிய சுக்கிரீவனைத் துரத்திக் கொண்டு வந்ததையும், சுக்கிரீவன் அங்கு வந்து ஒளிந்ததையும் கூறினான்; சுக்கிரீவன் வானரத் துணையோடு தங்கி இருக்கிறான்” என்று விளக்கினான். அவ்வாறே இராமனும்தான் அடைந்த துயரினை அனுமனுக்குச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அனுமன், தான் அந்தணன் அல்லன் என்றும், வானர இனத்தினன் என்றும் தெரிவித்துத் தன் சுயஉருவை அவர்களுக்குக் காட்ட, வானும் மண்ணு மாய் நின்ற அவன் நெடிய வடிவத்தைக் கண்டு, வியந்தான் இராமன்; அவனை ‘மாவீரன்’ என்று கூறிப் பாராட்டினான்!

அப்பொழுதே சுக்கிரீவனைத்தான் அழைத்து வருவதாய்க்கூறி விடைபெற்று நடை காட்டினான் அனுமன்.