பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கம்பராமாயணம்



போர் மும்முரமாய் நடந்தது; சுக்கிரீவனை வாலி பந்தாடுவது போலத் துக்கி எறிந்தான். அவன் தாக்குதலுக்கு ஆற்றாமல் சுக்கிரீவன் துவண்டுவிட்டான்; இராமன் மறைந்திருந்த பக்கம் வந்து மெல்லிய குரலில் தன்னைக் காக்குமாறு வேண்டினான் இராமன். “உங்கள் இருவருக்கும் வேறுபாடு காண முடியவில்லை; நீ கொடிப் பூ அணிந்து செல்; அடையாளம் தெரிந்து கொள்கிறேன்; என்று அவன் செவிவில் படுமாறு மெதுவாய் உரைத்தான்.

ஊக்கம் மிகுந்தவனாக வாலியோடு சுக்கிரீவன் போரில் இறங்கினான். அவனை விண்ணில் எறிய வாலி தயாராய் இருந்தான். அந்த நிலையில் இராமன் அம்பு அவன் மார்பில் தொளைக்க, அவன் பிடி நெகிழ்ந் தவனாய்க் கீழே சாய்ந்தான்; மார்பில் பாய்ந்த அம்பைப் பிடுங்கி, “அதனை யார் எய்தது” என்று அறிய விரும்பினான்; அவனால் இயலவில்லை, இறுதியில் தன் வலிமை முழுவதும் பயன்படுத்தி, அதை இழுத்துப் பறித்தான்; “இராம” என்னும் திருப்பெயரைக் கண்டான்; இராமன் தன்மீது அம்பு எய்தியமைக்காக வருந்தவில்லை; சான்றோன் ஒருவன், தன் சால்பு குன்றிய நிலையில் நடந்து கொண்டான் என்பதற்காக வருந்தினான்; “அறம் வளைந்து விட்டதே” எனக்குமுறினான்.

“பரதனுக்குத் தமையனாய் விளங்கியவன், சகோதர பாசத்துக்கு இடையூறு செய்யலாமா?” என்று கேட்டான்.

“ஒவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்! காவிய நாயகனாகிய நீ நடுநிலைமை தடுமாறலாமா? சீதையைப் பிரிந்துவிட்டதால் மனம் தடுமாறி இந்தத் தவறைச்