பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

205



செய்துவிட்டாயா? உலகநெறி என்பது உயர்ந்தவர் செய்கையில் தானே அமைந்து கிடக்கிறது? தலைவன் நீ! தவறு செய்யலாமா? உலகமே உன் செயல், பேச்சு, இவற்றைக் கவனிக்கிறது; அம்பு எய்ய நினைத்திருக்கலாம் அது உன்சொந்த விருப்பு வெறுப்புப் பற்றியது; ஆனால், மறைந்திருந்து அம்பு எய்தியது உன்வீரத்துக்கு இழுக்கல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு இராமன் விடை தரவில்லை; இலக்குவன் இடைமறித்து.

“சுக்கிரீவன் முதலில் வந்து இராமனைச் சந்தித்தான்; தனக்கு உதவுமாறு வேண்டினான்; அவனுக்கு உதவுவதாகக் கூறிவிட்டு, உன் முன்னால் வந்தால் நீயும் ‘அடைக்கலம்’ என்று கேட்டால் என்ன செய்வது? அதைத் தவிர்ப்பதற்குத்தான் மறைந்து இருந்து அம்பு செலுத்த வேண்டி நேர்ந்தது” என்று பதில் கூறினான்.

“இராவணனைக் கொல்வதற்கு உறுதுணை தேடி இருக்கலாம்; சிங்கத்தைத் துணையாகக் கொள்வதை விடுத்துச் சிறுமுயலை நம்பிச் செயல்பட்டு இருக்கிறாய்; “உன்னிடம் அறமும் இல்லை; அறிவும் இல்லை” என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது” என்று இராமனிடம் கூறினான்.

“நீ சொல்வதுபோல் என் தேவைக்காக உன்னைக் கொன்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது; தீமையைக் கண்டவிடத்து அதை ஒழிப்பது அரசு நீதியாகும்; நீ எந்தத் தவறும் செய்யாத உன் தம்பியை அலற வைத்தாய்; துரத்தித் துரத்தி அடித்தாய்; தீர விசாரித்து