பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

கம்பராமாயணம்



உண்மை காணாது அவனைக் கொல்வதிலேயே நாட்டம் கொண்டாய்; தம்பியை அழிக்க நினைத்திடும் நீ, எனக்குச் சகோதர பாசத்தைப்பற்றிய பாடம் கற்றுத் தருகிறாய்.

“தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ, அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய்; பிறர் மனைவியை விரும்பும் அற்பத் தனம் உன்னிடம் அமைந்துள்ளது; நீ உயிர் வாழத் தக்கவன் அல்லன், பற்களைக் குத்தித் துய்மைப் படுத்தச் சிறுதுரும்பு போதும்; உலக்கை தேவை இல்லை; இராவணனை அழிக்க எனக்கு உன் தம்பிபோதும்; நீ தேவை இல்லை” என்று கூறினான்.

“ஒழுக்கம் என்பது மானிடர்க்கு விதிக்கப்பட்ட வரையறை, நாங்கள் விலங்குகள்; விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்ற உரிமை கொண்டாட முடியாது. “கற்பு” என்ற கட்டுத்திட்டத்துக்கு இங்கே இடமே கிடையாது; மேல் மட்டத்தில் நீங்கள் வலிய அமைத்துக் கொண்ட கட்டுப்பாடு அது; எங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு விரும்பியவாறு வாழலாம் என்பதே”.

“வல்லவன் எதையும் செய்யலாம்; வலிமைதான் நியாய ஒழுங்குக்கு வரையறை; இது எங்களிடை நிலவும் விதி; எங்களிடம் அறநெறியை எதிர்பார்க்க முடியாது; நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ப வர்கள்; மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவுகோல்களை வைத்து, எங்களை அளப்பதில் நியாயம் இல்லை” என்று வாலி கூறினான்.

“மிருகம், மனிதன், என்பது உடலைப் பற்றியது அன்று; மனத்தைப் பற்றியது; மனிதனுக்குரிய அறிவும்