பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

207



ஆற்றலும் சிந்தனையும் உன்னிடம் உள்ளன; விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது” என்று இராமன் அவனைத் திருத்தினான்; வாலி மனம் மாறினான்.

அதற்குப் பின் “இராமன் தவறு செய்யமாட்டான்; நீரில் நெருப்புத் தோன்றாது; தவறு தன்னுடையதுதான் என்று உணர்ந்து அடங்கிவிட்டான் வாலி.

“தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு” என்று பெருமிதத்தோடு கூறினான்; “நான் கேட்கும் வரம் ஒன்று உள்ளது; அதைத் தரவேண்டும்” என்று கேட்டான்.

“என் தம்பி மது உண்டு, அம் மயக்கத்தில் கடமை செய்வதில் தவறக்கூடும்; அதைப் பெரிதாகக் கொள்ளாது அவனை மன்னித்துவிடு; என்மீது செலுத்திய அம்பை அவன்மீது செலுத்த வேண்டா, அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை” என்று தம்பியின் மீது கொண்ட பாசம் வெளிப்படும்படி இவ்வரத்தைக் கேட்டான். வாலி சிறியன சிந்தியாதான் என்பதை இராமன் இதனால் அறிய முடிந்தது.

“மற்றொரு வரம் வேண்டுகிறேன்; என் தம்பியை உன் தம்பிமார்களுள் யாராவது தமையனைக் கொன் றவன், என்று கூறி இகழ்வாராயின், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

வாலி இராமன் மதிப்பில் மிக உயர்ந்து நின்றான்.

“அனுமனை உன் வில்லைப்போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்; சுக்கிரீவனை உன் தம்பி இலக்குவனைப்போல ஏற்றுப் பாசமும் பரிவும் காட்டுக;