பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

227



சென்று சீதையிடம் பேசி ஆறுதல் கூறி அவள் தரும் செய்திகளைக் கேட்டறிந்து வரலாம் என்றும், அதுவும் முடியாவிட்டாலும் யாருமே போகாவிட்டாலும் தான் சொன்ன செய்தியை மட்டும் உறுதியாகக் கொண்டு இராமனிடம் அறிவித்தால் போதும் என்றும் கூறினான். காவல் மிக்கது இலங்கை; அதன் மதிலைக் கடந்து உள்ளே போவது எளிய செயலன்று; நான் சொன்னதைப் போலச் செய்யுங்கள்’ என்று கூறினான்.

“சடாயு தான் அரசனாய் இருந்து கழுகுகளை வழி நடத்தி வந்தான். அவன் மறைந்ததும் சிறகு இழந்து நான் செயலற்றுக் கிடந்தேன்; இப்பொழுது சிறகுகள் முளைத்து விட்டன; பழைய ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது; நான் அப்பறவைகளை வழிநடத்திச் செல்லுகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றான் சம்பாதி.

மகேந்திர மலையில் அனுமன்

“புள்ளரசன் சம்பாதி பொய்யுரை பேசான்; உள்ளங்கை நெல்லிக் கணிபோலத் தெள்ளத் தெளிய உள்ளதை எடுத்து உரைத்தான். இனி, நாம் உயிர்விடத் தேவை இல்லை; செய்ய வேண்டுவனவற்றைத் திறம்படச் செய்வதே தக்கது” என்று வானரர் தம் கருத்தைத் தெரிவித்தனர்.

“சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும் சுடர் விற்கை இராமனையும் தொழுது, உற்றது அறைந்தால் நம் கடமை முற்றுப்பெறும்; எனினும், நாமே ஆராய்தல் தெளிவான செயலாகும் என்ற முடிவிற்கு வந்து “நம்மால் கடலைக்