பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலகாண்டம்

23



பிடியில் அகப்பட்டு உலகக் குடிமகனாக மாறினார். எனினும், ஒழுக்கசீலர் என்பதால் விழுப்பம் உடையவர் என மதிக்கப்பட்டார். உரோமபாதரின் மருமகனாக இருந்த கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வரத் தசரதன் சென்றான்.

அவர் தலைமையில் மகவு நல்கும் வேள்வி நடத்த இருப்பதாயும், அவரை அனுப்பி வைக்கும்படியும் அழைப்பு விடுத்தான். மாமன்னன் வேண்டு கோளை மறுக்க முடியாமல் மாமுனிவராகிய கலைக் கோட்டா சானை அவரிடம் அனுப்பி வைத்தார் உரோம பாதர். வந்தவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூறிச் சிறப்புகள் செய்தான் தசரதன்.


வேள்வி தொடங்குதல்

கலைக்கோட்டு ஆசான் வேள்வித் தலைவராய் இருந்து சடங்குகளையும், முறைபாடுகளையும் செம்மை யாய்ச் செய்வித்து அவ்வேள்வியை நடத்தி வைத்தார்.

வேள்விக் குழிகளில் வெந்தி எழுப்பி மகப் பேற்றுக்கு உரிய அவிசுப் பொருள்களை அதில் இட்டு வேத மந்திரங்களை விளம்பித் தேவர்களுக்கு இட அவர்கள் மகிழ்ந்து அருள் செய்தனர்; ஒமக் குழியில் இருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டது; தட்டு ஒன்று தாங்கி வந்து அதைக் கலைக்கோட்டு ஆசானிடம் தந்து விட்டு மறைந்துவிட்டது. பொன்னொளி வீசிய பொற்புடைய தட்டில் அற்புதமான அமுதப் பிண்டம் இருந்தது. அந்தப் பிண்டத்தை அவர் அரசனுக்குத் தந்து நல் ஆசி கூறினார்.