பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

239



வத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில் கண் டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள்.

‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த
ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்'

அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய மருந்துச்செடி போல இருந்தது.

“வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா
நன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை,
மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”.

புலிக் கூட்டத்திடையே துள்ளி ஓடாத மானைக் கண்டான்; சிந்தனை முகத்தில் தேக்கித் தன்வாழ்வை எண்ணி நிந்தனை செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான். அவள் நினைவுகள் பழமைக்குச் சென்று, ஊர்ந்துகொண்டிருந்தன.

சீதையின் நினைவுகள்

“ஆட்சி இல்லை” என்றபோது நிலை கலந்காத அவனது பேராண்மை அவளுக்குப் பெருமிதம் தந்தது.