பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

கம்பராமாயணம்



“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

“வில்லை முறித்து வீரம் விளைவித்துத் தன்னை மணந்து கொண்ட வெற்றியை” நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அந்நியரிடமும் அன்பு காட்டி, உறவு கொண்டாடிய உயர்வை எண்ணிப்பார்த்தாள்; ஏழைமை வேடுவன்” என்றும் பாராது, அவனோடு தோழமை கொண்ட உயர் நட்பை நினைத்து மகிழ்ந்தாள்; நட்புக் கொள்ளும் இராமனது ஒப்புயர் வற்ற மனநிலை, அவள் மனக்கண் முன் வந்தது.

நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது; அந்தணன் ஒருவன், பேராசைக் காரன்; வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்றபோது இராமனிடம் அவன்தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.

மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.

சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே