பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

243



ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.

அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.

சீதை இருக்குமிடம் அடைந்த அனுமன் கண்ட காட்சி, அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; நம்பிக்கை நட்சத்திரமாய் அவள் ஒளிவிடுவதைக் கண்டான்; செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க இராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கமாக இருப்பதை அறிந்தாள்.

‘அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்; “கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள்” என்பதை அறிந்தான்; பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்” என்று பாராட்டினான்; மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது; ‘இழந்த வாழ்வு மீண்டும் இராமன் பெறுகிறான்’ என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.

“கல்லைப் பெண்ணாக்கிய இராமன் மனைவி யின் நெஞ்சு, “கல்லைப் போன்றது” என்று கண்டு கொண்டான்; பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை அவளிடத்தில் இருந்ததைக் கண்டான்.

இராவணன் நேர் உரை

எதிர்பாராதவாறு இலங்கை வேந்தன் இராவணன், ஆடை அங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப்