பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

கம்பராமாயணம்



உலகு நன்மை கருதிதான் பதவிகள் தரப்படுகின்றன; வரம் கொடுக்கும் தெய்வங்கள் தவறு செய்ததில்லை; தரம் கெட நடந்துகொள்ளும் நீ தான் தவறு செய்கிறாய்; அதனால் தருக்கும், செருக்கும் கொண்டு உலகை ஆட்டிப் படைக்கிறாய்; பொதுவாழ்வையும் கெடுக்கிறாய்; உன்னையும் நீ நாசப்படுத்திக் கொள்கிறாய்; பதவிகளும் பாராட்டு களும் ஆக்க வழியில் மனிதரை ஊக்குவிப் பதற்காக; அழிவுப் பாதையில் அவற்றைப் பயன்படுத்த அன்று” என்று அறிவுரை கூறினாள்.

உன் போர்க்களத்து வீரத்தைக் காட்டிப் பெருமைப் படுகிறாய்; வாழ்க்கைக் களத்தில் அப் பேராண்மை இருக்க வேண்டாவா? பிறன்மனை நோக்காத பேராண்மை உனக்குப் பீடு நடையும் பெருமையும் தருமே! ஒழுக்கம் விழுப்பம் தருமே! ஒழுக்கம் இன்மை கேடு தருமே! என்று தொடர்ந்து கூறினாள்.

நேராய் அவனொடு முகம் கொடுத்துப் பேசி, அவனைப் பெருமைப்படுத்த அவள் விரும்பவில்லை; அப்பார்வையும் அவனுக்கு வெறியை உண்டாக்கிக் கெடுத்துவிடும்; அதனால் ஒருதுரும்பை எடுத்துப் போட்டு, அதனைப் பார்த்து விளித்து, இக்கருத்து களைக் கூறினாள்; “அற்ப மனிதன், என்று கூறிய அவனை அவள் ஒர் அற்பப் புழுவாகக்கூட அவள் மதிக்கவில்லை; ஜீவனுள்ள பொருளாய் மதிக்க விரும்பவில்லை.

கிள்ளை மொழி போலப் பேசுவதாய் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். அவள் பேச்சு ஒவ்வொன்றும், அவன் ஏக்கத்தால் விடும் பெரு மூச்சுக்குக்