பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர காண்டம்

249



“வீரனே நீ யார்?” என்று கேட்டாள்.

“இராமன் அனுப்பிய தூதுவன்; பெயர் அனுமன்” என்றான்.

காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத் தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது; அவள் உள்ளம் உருகியது; இராமன் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வாழ்க்கை வாயில் தென்பட்டது; வேதங்கள் மறையவில்லை; அவற்றின் நாதங்களை அவளால் கேட்க முடிந்தது; நீதியும் அறமும் அழிய வில்லை; நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்; “இராமன் தன்னைக் கைவிடவில்லை; உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள்.

அரக்கர் வாழும் இடத்துக்குக் குரங்கினம் வந்தமை அவளுக்கு வியப்பைத் தந்தது.

“நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கேட்டாள்.

அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி அனுப்பப்பட்ட படை வீரர்களுள் தான் ஒருவன் என்பதையும் தான் இலங்கை மாநகரில் சீதையைக் கண்டதையும் விளம்பினான். இங்குதான் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டாள். “காட்டிடை நீவிர் இட்ட மற்றைய அணிகலன்கள்தான் உம் மங்கல அணியைக் காத்தன” என்று கூறினான்.

செய்தி கேட்டதும் ‘உய்தி உண்டு’ என்று நம்பினாள்; அவன் சொன்னவற்றிற்கு ஆதாரம் காட்ட முடியுமா? என்று கேட்டாள். இராமனிடமிருந்து தான்