பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

கம்பராமாயணம்



“என் உயிரைத் தந்த உத்தமன் நீ” என்று அனுமனை அவள் பாராட்டினாள்.

சூடாமணியைத் தருதல்

உள்ளத்தால் இருவரையும் ஒன்று படுத்திய அனுமன், “கள்ளத்தால் அவளை இராமனிடம் சேர்க்க முடியும்” என்று நினைத்தான்; அதற்கு அவள் இசை வினை எதிர்பார்த்தான்.

அவன் பிள்ளைமதியைக் கண்டு அவள், எள்ளி நகையாடினாள்.

“கடலிடை அரக்கர் வந்து எதிர்த்தால், உன் நிலைமை என்ன ஆகும்? கைப் பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டு போராடும் தாயாகத்தான் நீ இயங்க முடியும்; குழந்தையையும் கீழே வைக்க முடியாது; பகையையும் புறங்கொடுக்கச் செய்ய முடியாது” என்று உணர்த்தினாள்.

“நீ ஐம்புலன் அடக்கியவன்; என்றாலும், ஆடவன் ஆடவன்தான்; உன் தோள்மீது அமர்வது என் பெண்மைக்கு இழுக்கு” என்று சுட்டிக் காட்டினாள்.

“கோழை ஒருவன், தான் தாழ என்னைச் சிறை எடுத்தான்; கள்வனைப் போல சிறை எடுத்த அவனுக்கும் இறைமை உடைய உனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்; நீ நல்லது செய்ய நினைக்கலாம்; அல்லதாய் உன் செயல்முடியும்; இதைச் சிந்தித்துப் பார்”.

இராமன் அன்புக்கு அவனை இரையாக்குவது தன் மானத்துக்குப் பெருமை; பெண்மை வீறிட்டு எழுந்தால்