பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

கம்பராமாயணம்



பெருமக்கள் ஊர்வலம் நடத்தி என்னை உன்னிடம் அழைத்து வந்தனர்” என்றான்.

அவன் ஆணவப் பேச்சைக் கேட்ட அரசன், அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.

பாரதக் கதையில் துரியோதனன் அருகில் துச்சாதனன் இருந்தான்; வேடிக்கை பார்க்கும் வீரண் கர்ணன் இருந்தான்; தடுத்துப் பேச ஒரு விதுரன் தான் அங்கு இருக்க முடிந்தது.

இங்கே வீடணன் விதுரனாய்ச் செயல்பட்டான்.

“மாதரையும் துதுவரையும் கொல்வது அரச நீதியாகாது” என்று சாத்திரம் அறிந்த அவன், நீதியை எடுத்து உரைத்தான்.

இந்திரசித்து, பிரம்மாத்திரத்தால் கட்டுண்டவன், வெட்டுண்பது வேத நெறி ஆகாது; அதனால் வேறு கயிறுகளைக் கொண்டு கட்டுமாறு கட்டளையிட்டான் இராவணன்.

அவனைக் கொல்வதைவிட அவன் வாலை ஒட்ட நறுக்குவதே தக்கது என்றான்.

நம் வீரத்தை மாற்றாரிடம் விளம்ப அவனைத் திரும்ப அனுப்புவதேமேல் என்று விளக்கம் கூறினான்.

தங்கையை இராமலக்குவர் அங்கபங்கப்படுத்தியது போல, இவன் வாலுக்கு நெருப்பு வைப்பதே உகந்தது என்று கூறினான்.