பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

கம்பராமாயணம்



“ஐயனே! கேள்; தலைவியை நாம் எளிதில் மீட்க முடியும் என்று அறிந்த பின்பும் அடங்கி இருப்பது தக்கது அன்று; பேர்ருக்குப் புறப்படச் செயல் படுவோம்” என்று உரைத்தான்.

“எழுக வெம்படை” என்றான். “ஏய் என்னும் அளவில் கடல்போன்ற சேனை தென்திசை நோக்கிப் புறப்பட்டது.


யுத்த காண்டம்

வீடணன் அடைக்கலம்

பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித் தான்; மாணிக்கத் துண்கள் அமைந்த மணிமண்டபத் தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.

வரம்பறு சுற்றமும், மந்திரத் தொழில் நிரம்பிய அமைச்சரும், சேனைத் தலைவரும் அவன் அவைக் கண் அமர்ந்தனர். அரம்பை மாதர் கவரி வீசி அவனைச் சுகப்படுத்தினர். அடுத்து நடக்க வேண்டியதைத் தொடுத்துச் சிந்திப்பதற்குச் சற்று அயலானவரை வெளிப்படுத்தி, நெருங்கிய சுற்றத்தினரையும், அமைச்சரையும், உடன் பிறந்த தம்பியரையும் மட்டுமே நிறுத்திக் கொண்டான்.