பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

283



“இராமன் தாரத்தை விடு; அன்றிப் போர்க் களத்தில் உன் வீரத்தைக் காட்டு; ஒரம் கட்டி ஒதுங்கி நில்லாதே” என்றான்.

ஒர்ந்து பார்த்து முடிவைத் தேர்ந்து சொல்வதற்கு மாறாய் “அவனைப் பற்றிக் கொணர்க” என்று ஆணை இட்டான்; அவன் வீரர் ஏவல் கேட்டுப் பாய்தற்கு முன், அவன் காவல் நீங்கிக் காற்றின் வந்து காகுத்தனை வணங்கி நின்றான்.

முதற்போர்

அணிவகுத்துறப் படைகள் தம் பணியைச் செய்யத் தொடங்கின; பார்வேத்தர் இருவரும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்; வெட்டி மடியும் போரிலும் ஓர் வியப்பினைக் காண முடிந்தது; இராமன் அம்பு இராவணன் மணிமுடியைத் தட்டிப் பறித்ததுத் துார எறிந்தது; அது கடலுள் சென்று விழுந்தது; தொடை நடுங்கிய பகைப் படை வீரர் இடம் தெரியாமல் மறைந்தனர்; சிதறி ஓடினர்; பக்கத் துணையின்றி, இராமகாளைமுன் தனித்துப் போராடிக் களைத்து இராவணன் தான் வாளும் இழந்தான்; வாழ்நாள் இழக்கும் நிலையையும் அடைந்தான். படைக் கருவிகள் பட்டொழிந்தன. குறைக் காற்றுமுன் அகப்பட்ட மெல்லிய பூளைமலர் போல் இராவணன் படைகள் கெட்டொழிந்தன.

நிராயுத பாணியைத் தொட இராமன் அம்புகள் கூசின. ஒய்வு எடுத்துக் கொண்டு விரும்பும்போது ஆயுதம் தாங்கி வர “இன்று போய்ப் போர்க்கு நாளைவா” என்று கூறினான் மறத்திலும் அறம் காட்டிய இராமன். அவனுக்கு