பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

கம்பராமாயணம்



வாய்ப்பு அளித்து இராமன் வாய்ச் சொல் பேசவில்லை; அவன் வீரம் பேசியது.

இராமன் அரக்கன் அல்லன், ஒரு மானுடன் எப்படி இருப்பான் என்பதை அறிய இராவணனுக்கு ஒர் வாய்ப்புக் கிடைத்தது.

           “வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
            நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

             தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்

            வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு
                                                                 இலங்கை புக்கான்”

இராமனை எள்ளி நகையாடியவன் இன்று அவன் வீரத்தையும் பெருமையையும் உணரத் தொடங்கினான்; தோல்வியையே காணாத அவன், மண்ணைக் கவ்வியது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்; உலகம் சிரிக்கும்; உண்மைதான். அதையும் அவன் பொருட் படுத்தவில்லை. தான் அடைய விரும்பிய சானகி நகுவாளே என்ற எண்ணம் தான் அவனைத் தலைகுனியச் செய்தது.

           “வான் நகும் மண்ணும் எல்லாம் தாம் நகும்;
                                                            நெடுவயிரத் தோளான்
            தான்நகும் பகைவர் எல்லாம் நகுவர்என்று
                                                      அதற்கு நாணான்
           வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்இயல்
                                                        மிதிலை வந்த
            சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்’