பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

கம்பராமாயணம்



சேரும்; உன் வலிமை உனக்கே தெரியாமல் இருக்கிறாய்” என்றான்.

அடுத்து மகோதரன் என்ற படைத்தலைவன் அவனுக்குச் செயல்படும் வகை குறித்துக் கூறினான்.

“ஊனைத் தின்று உடம்பைப் பருக்க வைத்திருக்கிறான் நம் கும்பகருணன்; அவன் ஒருவன்போதுமே அத்தனை பேரையும் வானுக்கு அனுப்ப”.

“மலைபோன்ற அவன் உடலைக்கண்டு பகைவர் நிலைகுலைந்து ஒடிவிடுவர்” என்றான்; அலைபோல் வந்த புதிய கருத்தை இராவணன் மலைபோல் இறுகப் பற்றிக் கொண்டான்.

கிங்கரர் நால்வரைக் கூவிக் கும்பகருணனை அழைத்து வருமாறு ஏவினான்; அவர்களும் மல்லர்களும் இரும்புத் தடிகளை ஏந்தி.


“உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்கு வாய் உறங்கு வாய்இ னிக் கிடந்து உறங்குவாய்”
 

என்று சொல்லி அவனை இடித்து எழுப்பினர். உறக்கம் நீங்கிய நிலையில் செறுக்குமொழி பேசும் இராவணன்முன் கும்பகருணன் வந்து நின்றான்; நின்றகுன்று, நடந்து வரும் மலையைத் தழுவுவது போல