பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

கம்பராமாயணம்



நீ சிறந்து கடமை ஒன்று ஆற்ற வேண்டும்; சீதையை விட்டுவிடு; என் இறப்பு உனக்கு ஒர் அபாய அறிவிப்பு; என்னை அழிப்பவர் உன்னை ஒழிப்பது உறுதி”.

“நான் இறக்கும் இழப்புக்கு அழவில்லை; அதற்காகக் கவலைப்படவில்லை; உயிரையும் இழக்கத் துணிந்தேன்; ஆனால், ஒன்றே ஒன்று; உன் முகத்தை நான் மறுபடியும் கானும் பேறு எனக்கு வாய்க்காது”.

“அற்றதால் முகத்தினில் விழித்தல்” என்று கூறிக் கும்பகருணன் விடை பெற்றுச் சென்றான்.

போர்க்களம் நோக்கிச் சென்ற அவனோடு பெரும்படை ஒன்றும் துணையாய்ச் சென்றது.

உருவத்தால் பெரிய கும்பகருணன் வடிவம் இராமனுக்குப் பெரு வியப்பைத் தந்தது.

“உடல் வளர்ப்புப் போட்டியில் யாரும் இவனை வெல்லமுடியாது” என்று முடிவு செய்தான்.

“மலையா? மாமிசப் பிண்டமா?” என்று கேட்டான்.

“எனக்கு முன்னவன், இராவணனுக்குப் பின்னவன்; அறச்சிந்தையன்; அறிவுச் செல்வன்; கடமை வீரன்”

“களம்நோக்கி இங்கு இவன் வந்தது உள் உவந்து மேற்கொண்ட செயல் அன்று; கடமை; அதன் உடைமையாகிவிட்டான்; பலிபீடம் தேடி வந்த வலியோன்” என்றான் வீடணன்.

அமைச்சனாய் இருந்து அறிவுரை கூறும் சுக்கிரீவன், “அவனை நல்லவன் என்கிறாய்; வல்லமை அவனைப்