பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

291



போருக்கு இழுத்து வந்து இருக்கிறது; தடுத்து நிறுத்து; முடிந்தால் நம்மோடு அவனைச் சேர்த்துக் கொள்ளலாம்” என்றான்.

“வீடணன் இவனை நேசிக்கிறான்; பாசம் காட்டுகிறான்; இவனை வாழவிட்டால் வீடணனும் மகிழ்வான்” என்று தொடர்ந்தான்.

“சென்று இவனை அழைத்துவரத் தானே செல்கை நன்று” என்று வீடணன் விளம்பினான்.

கடற்பெரும் வானர சேனையைக் கடந்து தன் அரக்கர் பெரும்படையை வீடணன் சார்ந்தான்; உடல் பெரும் தோற்றம் உடைய கும்பகருணன் கால்களில் விழுந்து வணங்சினான்.

அவனை எழுப்பி, உச்சிமோந்து, உயிர் மூழ்க அனைத்துக் கொண்டு, ‘நீ ஒருவனாவது உயிர், தப்பிப் பிழைத்தாய்’ என்று மகிழ்வு கொண்டிருந்தேன்”.

“நீ அபயம் பெற்றாய்; அபாயம் நீங்கினாய்; உபயலோகத்தில் உள்ள சிறப்புகளை எல்லாம் பெற்றாய்; நீ கவிஞன், கற்பனை மிக்கவன்; நிலைத்த வாழ்வினன்; யான் அற்ப ஆயுள் உடையவன்; அமுதம் உண்ணச் சென்ற நீ மீண்டும் கைப்பினை நாடியது ஏன்? நஞ்சினை நயந்து வந்தது ஏன்? வாழப் பிறந்த நீ, ஏன் சாக இங்கு வந்தாய்”?

“அரக்கர் குலம் அழிந்தாலும் நம் பெயர் சொல்ல நீ ஒருவன் இருக்கின்றாய், என்று மகிழ்ந்திருதேன்; உயிர்