பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

301



மகோதரன் இலக்குவனுக்கு ஆற்றாமல் ஒடி விண்ணில் ஒளிந்தான்; அங்கிருந்து ஐராவதம் என்னும் யானை மீது அமர்ந்து இந்திரனைப் போல வேடம் புனைந்து, முனிவர்களையும் தேவர்களையும் வஞ்சித்து அழைத்துக் கொண்டு மண்ணுலகம் வந்து, இலக்கு வனோடு போர் தொடுத்தான்; வானவரோடு போர் செய்தலை வானரங்கள் விரும்பவில்லை; தேவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள்?’ என்பது இலக்குவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

செயவிழந்த இந்நேரத்தில் அயன்படையை இந்திரசித்து ஏவினான். அப்படையினின்று அளவு மிக்க அம்புகள் வெளிப்பட்டு, வானரர்மீதும் ஏனைய படைஞர் மீதும் பாய்ந்தன. அவ் அம்புகளுக்கு ஆற்றாமல் அவர்கள் அயர்ந்து விழுந்தனர்; இலக்குவனும் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தான்: மூச்சுபேச்சு அற்று விழுந்தவன் போல் காணப்பட்டான்; போர்க் களமே பிணக்களமாய்க் காட்சியளித்தது.

இந்திரசித்து தன் தந்தையிடம் சென்று, அயன் படையால் நேர்ந்த அழிவுகளைச் சொல்லி, ‘இராமன் ஒருவனைத் தவிர அனைவரும் துறக்கம் புக்கனர்’ என்றான்; இலங்கையர்கோன் உள்ளம் பூரித்தான்; ‘போர் முடிந்தது’ என்று உவந்தான்; ‘தனியனான இராமனை இனி எளிதில் சந்திக்க முடியும்’ என்று நினைத்தான்.

இராமன் போர்க்களம் சென்று களம்பட்ட வானரங் களையும், சுக்கிரீவனையும், அனுமன், சாம்பவான் முதலிய படைத்தலைவர்களையும், தம்பி இலக்குவனை